தியேட்டரில் நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத செயல் : கமல், வெற்றிமாறன் கண்டனம்

பத்து தல திரைப்படம் நேற்று திரையரங்குகளில் உலகெங்கும் வெளியானது . அந்த படத்தை காண நரிக்குறவர் இன மக்கள் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு வந்துள்ளனர். டிக்கெட் வைத்திருந்தபோதும் திரையரங்கில் நரிக்குறவர்களை படம் பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதற்கு நெட்டிசன்கள் கடுமையான எதிர்பை தெரிவித்து வந்தனர். பின்னர் தியேட்டர் நிர்வாகம் அதுபற்றி ஒரு விளக்கம் அளித்ததோடு அவர்களை படம் பார்க்க அனுமதித்ததாகவும் ஒரு வீடியோ வெளியிட்டது. இருப்பினும் இந்த … Read more

Rashmika disappointed : ஆர்டர் போட்டது பர்கருக்கு.. ஆனா வந்தது என்ன தெரியுமா? ஏமாற்றத்தில் ராஷ்மிகா!

ஐதராபாத் : நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ்ஷாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது புஷ்பா 2 உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் ராஷ்மிகா மந்தனா சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தான் ஏமாற்றப்பட்டதை வெளிப்படுத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகை ராஷ்மிகா மந்தனா நேஷனல் க்ரஷ்ஷாக … Read more

கர்நாடக தேர்தல்: சாதிகளின் வானவில் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் அறிவிக்காத காங்கிரஸ்

கர்நாடக தேர்தல்: சாதிகளின் வானவில் கூட்டணி; முதல்வர் வேட்பாளர் அறிவிக்காத காங்கிரஸ் Source link

ஒரு கொசு வர்த்தியால் ஆறு பேர் உயிரிழந்த சோகம்!!

கொசுவர்த்தியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் கொசுத்தொல்லை அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் தினமும் கொசுவர்த்தி ஏற்றி வைத்துவிட்டு தூங்குவதை அப்பகுதி மக்கள் வழங்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் ஒரு குடும்பத்தினர் வழக்கம் போல் இரவு கொசுவர்த்தி ஏற்றிவைத்து விட்டு அனைவரும் தூங்கிவிட்டனர். மறுநாள் காலை வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார், கதவை … Read more

முதலமைச்சருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த நீதிமன்றம்!!

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டப்படிப்பு விவரங்களை வெளியிடக்கோரிய வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் ரூ.25,000 அபராதம் விதித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி குறித்து அறிந்து கொள்ள, அவர் பட்டம் பெற்றதாக கூறப்படும் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். கேட்கப்பட்ட தகவல் 3ஆம் தரப்பினருடையது எனக்கூறி, அதை அளிக்க டெல்லி மற்றும் குஜராத் … Read more

சமைக்காததால் மனைவியை அடித்தே கொன்ற கணவன்!!

வீட்டில் உணவு சமைக்காத மனைவியைக் கணவன் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த பஜ்ரங்கி குப்தா – ப்ரீத்தி தம்பதிக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் ப்ரீத்தியின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்துள்ளது. எனவே, அவர் வீட்டு வேலைகள் செய்வதில் சிரமப்பட்டு வந்துள்ளார். அவரது கணவர் பஜ்ரங்கி குப்தா மனைவிக்கு உதவியாக இல்லாமல் சோம்பேறி என திட்டி வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடித்து விட்டு பஜ்ரங்கி குப்தா இரவு … Read more

`லண்டன், பிரான்ஸில் வேலை’ – புதுக்கோட்டை இளைஞர்களிடம் ரூ.1 கோடி மோசடி; பெண் உட்பட 3 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள நாட்டுமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்த நிலையில் தான், கே.புதுப்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் ராஜா என்பவர் சேகருக்கு, அறிமுகமாகியிருக்கிறார். “லண்டன், பிரான்ஸ் என்று இளைஞர்கள் பலரையும் வேலைக்கு அனுப்பியிருக்கிறேன். பாஸ்போர்ட் மற்றும் ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால் போதும், உன்னையும் லண்டன் அல்லது பிரான்ஸிற்கு அனுப்பி வைக்கிறேன்” என்று ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதனை நம்பி பாஸ்போர்ட் மற்றும் ரூ.15 … Read more

கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி பெண் உயிரிழப்பு -போலீசார் விசாரணை

சேலம் அருகே 5 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் மயங்கி விழுந்து கர்ப்பிணி உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்மாபேட்டையைச் சேர்ந்த கார்த்தி – சந்தியா தம்பதிக்கு ஓராண்டுக்கு முன் திருமணமான நிலையில், சந்தியா 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். நேற்று மாலை வீட்டின் முன் குப்பைகளை அகற்றிக்கொண்டிருந்த போது அசெளகரியத்தை உணர்ந்த சந்தியா, கால்வாய்க்கு அருகே சென்று வாந்தி எடுத்துக் கொண்டிருந்த போதே மயக்கமுற்று உள்ளே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், … Read more

விசாரணைக்கு வந்தோரின் பற்களை பிடுங்கிய பல்வீர் சிங் நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் சம்மன்

சென்னை: திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய குற்றம்சாட்டப்பட்டவர்களின் பற்கள் பிடுங்கப்பட்ட சம்பவம் குறித்து வரும் ஏப்ரல் 3-ம் தேதி ஏஎஸ்பி பல்வீர் சிங் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பல்வீர் சிங் பொறுப்பு வகித்து வந்தார். அம்பாசமுத்திரம் கோட்ட காவல் துறைக்கு இவர் பொறுப்பேற்றபின், சிறிய குற்றங்களுக்காக காவல் துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்து வந்ததாக … Read more

அவுரங்காபாத்தில் ராமநவமி விழாவில் வன்முறை: அரசியல் சாயம் பூசவேண்டாம் என பட்னாவிஸ் வேண்டுகோள்

அவுரங்காபாத்: மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ராமநவமி விழாவில் இளைஞர்கள் சிலர் மோதிக்கொண்டனர். இதை தடுக்க முயன்ற போலீஸார் மீது 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது. அவுரங்காபாத் கிரத்புரா பகுதியில் புனரமைக்கப்பட்ட ராமர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ராமநவமி விழா நேற்று முன்தினம் இரவே களைகட்டியிருந்தது. பாதுகாப்பு பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், கோயிலுக்கு அருகில் இளைஞர்கள் சிலர் தங்களுக்குள் மோதிக் கொண்டனர். இதையடுத்து 500-க்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் அங்கிருந்த போலீஸார் மீது … Read more