தமிழகத்தின் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…

சென்னை:  சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழகத்தின் தலைமைச் செயலரை தேர்தல் ஆணையம் மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழகத்தின் தலைமைச் செயலரை மாற்றியதால் மக்கள் எப்படி பாதிக்கப்படுவாா்கள் எனக் கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் மனுவை தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் ஆட்சியாளர்களின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த பல அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காவல்துறை உயர்அதிகாரிகள், தலைமைச்செயலாளர் முருகானந்தம் உள்பட பல உயரதிகாரிகளும் மாற்றப்பட்டனர். இநத் … Read more

Chennai : 'ஊருக்கு போக பஸ் இல்ல!' – நள்ளிரவில் அவதிப்பட்ட மக்கள்; கோட்டைவிட்ட போக்குவரத்து துறை?

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு வாக்களிக்க புறப்பட்டுச் சென்ற மக்கள் முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். Chennai சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து வழக்கமாக இயங்கக்கூடிய 2092 பேருந்துகளுடன் 6234 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், மேலும் ஏப்ரல் 21 முதல் ஏப்ரல் 23 பிற்பகல் வரைக்கும் மொத்தமாக 11,323 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை தரப்பில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சென்னையின் முக்கிய பேருந்து நிலையங்களான கிளாம்பாக்கம், மாதவரம், … Read more

வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல தடை – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Tamil Nadu Election : வாக்குச்சாவடிக்குள் என்னென்ன பொருட்கள் எல்லாம் கொண்டு செல்லக்கூடாது என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள். செல்போன் எடுத்துச் செல்ல முக்கியமாக தடை விதிப்பு.

காலை 7மணிக்கு தொடங்கியது தமிழக சட்டமன்றதேர்தல் வாக்குப்பதிவு….

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை  7 மணிக்கு தொடங்கிய நிலையில், காலே முதலே விறுவிறுப்பான நடை பெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகின்றது.   பல பகுதிகளில் காலை 7மணிக்கு சரியாக வாக்குப்பதிவு  தொடங்கிய நிலையில் சில இடங்களில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் சில காரணங்களால் சில நிமிடங்கள் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, வெயில் காலம் என்பதால் … Read more

இன்று வாக்குப்பதிவு: யாருக்கு வாக்களிக்க வேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள்…

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை சற்றே சிந்தித்து ஒவ்வொருவரும் வாக்களிக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகாலம் நம்மை ஆளப்போகிறவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதால், வாக்களிப்பதிலும், யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதிலும்  ஒவ்வொரும் கவனம் செலுத்துவது சாலச்சிறந்தது. தமிழ்நாட்டின் தற்போதைய சட்டமன்றத்தின் ஆயுட்காலம் மே 10ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் புதிய சட்டமன்றம் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்கான ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் … Read more

ஊழல் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதில் ஆண்ட, ஆளும் கட்சிகள் இடையே போட்டி! தவாக வேல்முருகன்

சென்னை: ஊழல் பணத்தை வாக்காளர்களுக்கு கொடுப்பதில் ஆண்ட, ஆளும் கட்சிகள் இடையே போட்டி என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர்  வேல்முருகன்  விமர்சித்துள்ளார். திமுக கூட்டணியில் பயணித்து வந்த தவாக கட்சிதலைவர் வேல்முருகன், இந்த தேர்தலில் தான் கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில்,  திமுக உள்பட அனைத்து கட்சிகளையும் விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், தவாக தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில்,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு … Read more

''இறைவன் ஒருவன் தானே''- மீனாட்சி அம்மனை வரவேற்ற இசுலாமியர்கள்; சமத்துவம் பேசும் மதுரை சித்திரை விழா!

மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 19 அன்று சிறப்பாக கொடியேற்றபட்டு வெகு விமர்சையாக நடந்துகொண்டிருக்கிறது. மதுரை அரசி மீனாட்சி அம்மையும், சுந்தரேஸ்வர பெருமானும், பிரியாவிடை தாயாரும் தினந்தோறும் மதுரையின் வீதிகளில் உலா வந்து நகரத்தை அலங்கரித்துக் கொண்டிருகின்றனர், அந்த வகையில் நான்காம் நாள் விழாவான இன்று மீனாட்சி அம்மனும், சொக்கநாதர், பிரியாவிடையும் தங்க பல்லக்கில்; எப்போதும் வலம் வரும் நான்கு மாசி வீதிகளில் அல்லாமல்; வில்லாபுரம் , அவனியாபுரம், சிந்தாமணி, சாமநத்தம் , கீரைத்துறை பனையூர் … Read more

எடப்பாடி: வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்

TN Assembly Election: சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி மையங்களுக்கு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

LSG vs RR: தோல்வியில் இருந்து மீண்ட ராஜஸ்தான் அணி.. 40 ரன்கள் வித்தியாசத்தில் அபாரம்! LSG-க்கு அதிர்ச்சி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, தோல்வியில் இருந்து மீண்டுள்ளது.   

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வீட்டில் ரூ.1 கோடி பதுக்கி வைத்த பணம் பறிமுதல்! தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை…

சென்னை: பட்டினப்பாக்கத்தில்  இன்று (ஏப்ரல் 22)  தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 1 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.  சட்டமன்றத் தேர்தல் விதிமுறைகளின்படி, ஆவணங்களின்றி ரூ. 50,000-க்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை உள்ள நிலையில், முறையான ஆவணங்கள் இன்றி இந்த பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சென்னை … Read more