கர்நாடகாவில் நாகப்பாம்பை பிடித்து முத்தமிட்ட இளைஞரை அதே பாம்பு அவரை என்ன செய்தது பாருங்க..!!

கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி பகுதியைச் சேர்ந்தவர்கள் அலெக்ஸ், ரோனி. இவர்கள், இருவரும் பொதுமக்களை அச்சுறுத்தும் பாம்புகளை பிடித்து, காடுகளில் விட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொம்மனக்கட்டில் உள்ள ஒரு திருமண வீட்டில் 2 நாக பாம்புகள் இருந்தன. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், அலெக்ஸ், ரோனிக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் 2 பேரும் அங்கு சென்று பாம்புகளை மீட்டனர். அதில், ஒரு பாம்புக்கு காயம் ஏற்பட்டு இருந்தது. அதை மீட்ட அலெக்ஸ், அதை … Read more

கள்ளக்காதலை கைவிட மறுத்த மனைவியையும், அவருக்கு உடந்தையாக இருந்த 14 வயது மகளையும் கழுத்தை அறுத்துக் கொலை..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் நந்தகிராம் காவல் நிலையத்திற்குட்பட்ட சாதிக் நகரில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு பெண் சடலங்கள் கிடப்பதாக காவல்துறை அதிகாரி முனிராஜிக்கு நேற்று தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ரேகா (35), அவரது 14 வயது மகள் கழுத்து அறுபட்ட நிலையில் அந்த வீட்டில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். ஆனால், ரேகாவின் கணவர் சஞ்சீவ் பால் தலைமறைவாகி இருந்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பல … Read more

முதல் மனைவி தலைமையில் 2-வது திருமணம் செய்து கொண்ட டிக்டாக் பிரபலத்தின் தற்போதைய நிலையை பாருங்க..!!

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கல்யாண். டிக் டாக்கில் பிரபலமான இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறி திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். … Read more

விகடன் ஸ்கிரீன்ப்ளே ஒர்க்‌ஷாப்: "90% படங்கள் தோல்வியடைவது ஏன்? ஜெயிப்பது எப்படி?"- சிறப்புப் பயிற்சி

தமிழ் சினிமா ரசிகர்கள் பரிணாம வளர்ச்சியடைந்து விட்டார்கள். ‘அந்தப் படத்தில் கதை நல்லா இல்லை’ என்று சொன்ன காலம் மலையேறிவிட்டது. ‘திரைக்கதை சொதப்பிட்டாங்க!’, ‘கதை சூப்பர்… ஸ்கிரீன்ப்ளே அவுட்!’ என்பதெல்லாம் வாடிக்கையாகிவிட்டன. ஹாலிவுட்டில் திரைக்கதைக்கென்றே தனி டீம் போட்டு உழைக்கிறார்கள். பாலிவுட், டோலிவுட், மல்லுவுட், சாண்டல்வுட்களில் திரைக்கதைக்கெனத் தனியாக ஆட்கள் வேலை செய்கிறார்கள். தமிழிலும் தற்போது அந்த டிரெண்ட் உருவாகிவருகிறது. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் திரைக்கதை வடிவமைப்பாளர்களில் ஒருவர்தான் பாலகுமாரன் தமிழ்ச்செல்வன். தமிழ் சினிமாவின் … Read more

சர்வதேச முதியோர் தினம் | முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு விருது – ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ சார்பில் வழங்கப்பட்டது

சென்னை: சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ சார்பில் முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜனுக்கு விருது வழங்கப்பட்டது. முதியோரை ஊக்கப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச முதியோர் தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்த விழா நடைபெறவில்லை. இந்நிலையில், சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ‘ஹெல்ப் ஏஜ் இந்தியா’ அமைப்பு சார்பில் சர்வதேச முதியோர் தினம் நேற்று … Read more

13 பெருநகரங்களில் 5-ஜி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி – 2 ஆண்டுகளில் 90% பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும்

புதுடெல்லி: டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 பெருநகரங்களுக்கான 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை நேற்று டெல்லியில் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா புதிய வரலாறு படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவில் 1995-ல் செல்போன் சேவையும், இணைய சேவையும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, 2-ஜி, 3-ஜி, 4-ஜி இணைய சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகின. இந்த வரிசையில் 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை பிரதமர் மோடி டெல்லியில் நேற்று தொடங்கிவைத்தார். மேலும், இந்திய மொபைல் காங்கிரஸ் மாநாட்டையும் அவர் தொடங்கிவைத்தார். டெல்லி … Read more

ரயிலில் பயணம் செய்தபோது அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல் நலக்குறைவு

சிதம்பரம்: தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்றுமுன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுக்கோட்டையில் ஏறியுள்ளார். ஏசி முன்பதிவு பெட்டியில் பயணித்த அவருக்கு நள்ளிரவு 2 மணியளவில் சிதம்பரம் அருகே வந்தபோது திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடல் வியர்ப்பதாக உதவியாளரிடம் கூறியுள்ளார். இதுபற்றி போலீசாருக்கு தெரிவித்ததையடுத்து சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது, சிதம்பரம் ரயில்வே போலீசார், அமைச்சர் மெய்யநாதனை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அண்ணாமலைநகரில் உள்ள கடலூர் … Read more

கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு

டேராடூன்:  உத்தரகாண்டில் கேதர்நாத் கோயில் அருகே பனிச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.  உத்தரகாண்ட் மாநிலத்தின் புகழ்பெற்ற கேதர்நாத் கோயில் அமைந்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டு கேதர்நாத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று காலை கேதர்நாத் கோயிலின் பின்புறத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. நேற்று காலை 6.30மணியளவில் ஏற்பட்ட இந்த பனிச்சரிவில் பக்தர்கள் அச்சமடைந்தனர். கேதர்நாத் கோயில் கமிட்டி தலைவர் அஜேந்திரா அஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கேதார் டோம் மற்றும் ஸ்வர்கரோகினி இடையே பெரிய … Read more

சிரஞ்சீவிக்கு சங்கடத்தை ஏற்படுத்திய காட்பாதர் டிரைலர்

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் லூசிபர். இந்த படம் தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. ரீமேக் படங்களை இயக்குவதற்கு பெயர் பெற்ற இயக்குனர் மோகன்ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்திலிருந்து … Read more

ஜாதகத்தில் சிறை செல்லும் யோகம் இருக்கிறதா? உத்தராகண்ட் சிறையில் ஒரு நாள் தங்கி தோஷத்தைப் போக்கலாம்!

ஒருவருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால், அவருக்குப் பல்வேறு பிரச்னைகள் வருவதுண்டு. அப்படியான பிரச்னைகள் நீங்கிட ஜோதிடர்கள் குறிப்பிட்ட பரிகாரங்களைச் சொல்லிச் செய்யச் சொல்வார்கள். ஜாதக கிரகநிலைகளின்படி ஆயுள் கண்டம், கடன் பிரச்னைகள், இழப்புகள், அவமானங்கள் முதலான பிரச்னைகள் வரும் என்பதை கணித்து அதற்கேற்ப பரிகாரங்கள் சொல்லப்படுவது வழக்கம். ஆலயங்களுக்குச் சென்று வழிபடுதல், நவகிரக ப்ரீதி, ஹோம வழிபாடுகள் என்பதாகப் பரிகார விஷயங்கள் சொல்லப்படுவது உண்டு. சிறை செல்லும் தோஷம் நீங்குமாம்! இந்த வகையில் காராகிரஹ தோஷம் என்றும் … Read more