6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 2-ம் தேதி ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது மழைபெய்யக் கூடும். 3, 4, 5-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். 2-ம் தேதி … Read more

நாடாளுமன்ற கட்டிடம் மீதான தேசிய சின்னத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

புதுடெல்லி: இந்தியாவின் தேசியச் சின்னமான நான்முகச் சிங்கம்,புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேல் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. 6.5 மீட்டர் உயரம், 9,500 கிலோ எடையில், வெண்கலத்தில் உருவாக்கப்பட்ட நான்முகச் சிங்கத்தை தாங்கிப் பிடிக்க 6,500 கிலோ எடையில் நான்குபுறமும் இரும்புத் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சிற்பத்தை பிரதமர் மோடி, கடந்த ஜூலை மாதம் திறந்து வைத்தார். இந்நிலையில், வழக் கறிஞர்கள் அல்டானிஷ் ரெய்ன், ரமேஷ் குமார் மிஸ்ரா ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “வாரணாசியில் உள்ள … Read more

8 வார்டுகளில் கூட்டணியுடன் வெற்றி கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

கயத்தாறு: கடம்பூர் பேரூராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 12 வார்டுகளில் 8 வார்டுகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகாவில் உள்ள கடம்பூர் பேரூராட்சியின் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். மற்ற 9 வார்டுகளுக்கு தேர்தல் உயர்நீதிமன்ற உத்தரவின்படி கடந்த மாதம் 29ம் தேதி நடந்தது. வார்டுகளில் திமுக சார்பில் 7 வேட்பாளர்களும், காங்கிரஸ், மதிமுக சார்பில் தலா ஒரு வேட்பாளரும், பாஜ சார்பில் ஒரு வேட்பாளரும், சுயேச்சைகள் 13 பேர் … Read more

பாலிவுட் நடிகை தூக்குபோட்டு தற்கொலை

மும்பை: மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 30 வயதுள்ள இளம்பெண் ஒருவர் அறை எடுத்து தங்கினார். கடந்த 28ம் தேதி தனது அறையில் தங்கிய அவர் வெளியில் வரவில்லை. சந்தேகம் அடைந்த ஓட்டல் ஊழியர்கள் அறையின் கதவை உடைத்து பார்த்தபோது, அந்த இளம்பெண் மின்விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த வெர்சோவா பகுதி போலீசார், பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு … Read more

மஹா.,வில் இளைஞர் சுட்டுக் கொலை| Dinamalar

மும்பை, :மஹாராஷ்டிராவில், லால்ஜிபடா என்ற இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்த நான்கு பேர் மீது, பைக்கில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பினர். இதில், ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார்; காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்தவர் அங்கிட் யாதவ், ௨௬. இவருக்கும், சோனு பாஸ்வான் என்பவருக்கும் இடையே, கிருஷ்ண ஜெயந்தி விழாவின் போது தகராறு ஏற்பட்டுள்ளது. ‘இதையடுத்து, சோனு பஸ்வான் அங்கிட் யாதவை கொன்றிருக்க வேண்டும்’ என, போலீசார் தெரிவித்தனர். சோனு பாஸ்வான் மற்றும் அவருடன் வந்தவர் … Read more

பாவாடை தாவணியில் அசத்தும் ரம்யா பாண்டியன்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமாகிவிட்ட ரம்யா பாண்டியன் சோசியல் மீடியாவில் பெரிய அளவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். தொடர்ந்து போட்டோ சூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் சில தினங்களுக்கு முன்பு உள்ளாடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது பாவாடை தாவணியில் மங்களகரமாக ஒரு போட்டோ சூட் நடத்தி அது குறித்த புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு உள்ளாடை அணிந்து வெளியிட்ட புகைப்படங்களை விட இந்த … Read more

50 ஆயிரம் பேருக்கு சாப்பாடு போட்டதை அரசியலாக்காதீர்கள்; மகனின் திருமணத்துக்கு ஆன செலவு ரூ.3 கோடிதான்: பழனிசாமிக்கு அமைச்சர் பி.மூர்த்தி பதில்

மதுரை: மதுரையில் நேற்று முன்தினம் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசும்போது, அமைச்சர் பி.மூர்த்தி, தனது மகன் திருமணத்தை ரூ.30கோடி செலவில் மிக ஆடம்பரமாக நடத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அமைச்சர் பி.மூர்த்தி கூறியது: எனது மகன் திருமணத்தில் அனைத்து மக்களையும் சமமாக பாவித்து உணவருந்த ஏற்பாடு செய்தேன். ஒரு இலை உணவுக்கு ரூ.300 செலவாகியிருக்கும். எனது தொகுதியைச் சேர்ந்த ஏழை மக்கள், திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சித் தொண்டர்களும் எனது அழைப்பை ஏற்று … Read more

5000 முதல் 5500 ரஷ்ய வீரர்களை சுற்றி வளைத்தது உக்ரைனிய படை: முக்கிய நகரை விடுவித்து அசத்தல்!

ரஷ்ய படைகளை சுற்றி வளைத்து, உக்ரைனின் கிழக்கு பகுதியான லைமன் நகரை மீட்ட உக்ரைனிய படை. இந்த வெற்றி டான்பாஸ் பகுதியை விடுவிப்பதற்கான அடுத்த நகர்வு என உக்ரைன் அறிவிப்பு. ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு உக்ரைனிய பகுதியான லைமன் நகரை உக்ரைனிய படைகள் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட எட்டாவது மாதமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரின் தொடக்கத்தில் ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்த பகுதிகளை … Read more

மகளிருக்கான இலவச பஸ்சில் ஏற்றி மூதாட்டியை கட்டண டிக்கெட் எடுக்க வைத்து அதிமுகவினர் அவதூறு வீடியோ; நடவடிக்கை எடுக்கப்படுமா? எஸ்பி விளக்கம்

கோவை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் கையெழுத்தில் அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிமுகம் செய்தார். அது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை சகித்துக்கொள்ள முடியாமல் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அதிமுக தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த கோவை மதுக்கரை பிரித்விராஜ் (40). மதிவாணன் (33) ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் இருந்து பாலத்துறைக்கு புறப்பட்ட அரசு டவுன் பஸ்சில் துளசியம்மாள் (70) என்பவரை ஏற்றினர். பிரித்விராஜ், மதிவாணன் … Read more

பிரிவினையை கோரவில்லை மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கேட்கிறோம்: இந்திய கம்யூ. கேரள மாநில மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: சுயாட்சி தன்மை கொண்டவையாக மாநிலங்கள் இருப்பதை ஒருமைப்பாட்டிற்கு விரோதம் என்று  ஆட்சியில் உள்ள பாஜவினர் மாற்றி சொல்கிறார்கள். நாம் கேட்பது மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தானே தவிர பிரிவினை மாநிலங்கள் அல்ல. இந்திய அளவில் கூட்டாட்சியை ஒப்புக்கொள்பவர்களால் கேட்கப்படுவதுதான் மாநிலத்தில் சுயாட்சி என்று கேரளாவில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது தேசிய மாநாடு விஜயவாடாவில் நடைபெற உள்ளது.  இதையொட்டி 4 நாள் நடைபெறும் கேரள … Read more