நெட்டே நெட்டே பனைமரமே; முதல்வர் வெளியிட்ட பனை நூல், `தமிழ் மண்வளம்' இணையதளம்… என்ன சிறப்பம்சம்?

பயிரின் மகசூலை உயர்த்துவதில் மண் வளம் முக்கிய பங்காற்றுகிறது. மண் வளம் என்பது, மண்ணின் தன்மை, மண்ணிலுள்ள கரிம, அமிலநிலை, தழை, மணி, சாம்பல் போன்ற பேரூட்டச்சத்துக்கள், இரும்பு, மாங்கனீசு போன்ற நுண்ணூட்டச்சத்துக்களின் அளவினை குறிக்கும். மகசூலுக்கு முக்கிய காரணியாக விளங்கும் மண்ணின் வளம் குறித்து ஒவ்வொரு விவசாயியும் அறிந்து அதற்கேற்ப உரமிடுவது மிகவும் அவசியமாகும். “தமிழ் மண்வளம்” இணையதளம் விளைநிலங்களின் மண்வளத்தை மேம்படுத்தும் வகையில், கடந்த 2022-23 ஆம் ஆண்டு வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், “தமிழ் … Read more

பட்டுக்கோட்டை நகைக்கடை அதிபர் தற்கொலை வழக்கை தனி அமைப்பு மூலம் விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

சென்னை: தனி அமைப்பை நியமித்து பட்டுக்கோட்டை நகைக் கடை அதிபர் தற்கொலை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆட்டைக் கடித்து.. மாட்டைக் கடித்து.. மனிதனைக் கடித்த கதையாக, இந்த திமுக அரசின் ஏவல் துறையாக விளங்கும் காவல் துறை, பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மீதும், அரசின் குறைகளை சுட்டிக் காட்டுபவர்கள் மீதும் … Read more

ரசாயன உரங்களை குறைப்பதற்கு மாற்று உரங்களை ஊக்குவிக்க ‘பிரதமர் பிரணாம்’ திட்டம்

புதுடெல்லி: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: 2023-24-ம் ஆண்டு சர்க்கரை பருவத்திற்கான (அக்டோபர் முதல் செப்டம்பர் வரை) நியாயமான விலை நிர்ணயத்துக்கு இக்கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் 10.25 சதவீத பிழிதிறன் கொண்ட கரும்புக்கு குவிண்டாலுக்கு தரவேண்டிய குறைந்தபட்ச விலை ரூ.315 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 0.1 … Read more

ஸ்லீப் அப்னியா நோய்க்கு CPAP கருவியைப் பயன்படுத்தும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்: உறுதிப்படுத்திய வெள்ளை மாளிகை

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த சில வாரங்களாக ‘ஸ்லீப் அப்னியா’ எனப்படும் உறக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய்க்கு CPAP சிபேப் எனும் கருவியைப் பயன்படுத்தி சிகிச்சை பெறுகிறார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. சமீபகாலமாக பைடனின் முகத்தில் சிபேப் கருவி பொறுத்தியதற்கான அடையாளங்கள் தெரியத் தொடங்கிய நிலையில் அது பேசுபொருளானது. இது தொடர்பாக வெளியான பல்வேறு ஊகங்களை களையும் வண்ணம் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், அதிபர் பைடன் … Read more

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்: இதை எதிர்பார்க்கல… ஸ்பீடும், டிக்கெட் கட்டணமும்… வெடித்த சர்ச்சை!

2024 மக்களவை தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு நகர்வும் நாட்டு மக்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் நாட்டின் அதிவேக ரயில் சேவை என்று அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை மத்திய அரசு அடுத்தடுத்து அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. அதுவும் பிரதமர் மோடியே முன்னின்று ஒவ்வொரு ரயிலையும் தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் ரயிலை வரவேற்ற பாஜகவினர்! வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் … Read more

அடித்து வெளுக்கும் மழை… வெள்ளக்காடான மும்பை… பயங்கர ட்ராஃபிக்கால் திணரும் மக்கள்!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளா முதல் ஹிமாச்சல் வரை தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருவதால் பல்வேறு மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் 2 வாரங்கள் தாமதமாக கடந்த ஞாயிற்றுக் கிழமைதான் தென்மேற்கு பவருமழை தொடங்கியது. இருப்பினும் தொடங்கிய உடனேயே பருவமழை நல்ல வேகமெடுத்துள்ளது. மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இதனால் இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. … Read more

Indian 2: இந்தியன் 2 ரிலீஸ் தேதி & இந்தியன் 3 அறிவிப்பு..உதயநிதி கொடுத்த வெறித்தனமான அப்டேட்..!

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- உலகநாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு புது உத்வேகம் பெற்றுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றார் கமல் . அந்த வகையில் கடந்த 2018 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து விக்ரம் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து மீண்டும் … Read more

டிமான்டி காலனி-2 பாடப்பிடிப்பு நிறைவு..! ரிலீஸ் எப்போது தெரியுமா?

அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள பேய் படம், டிமான்டி காலனி2. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. 

மணிப்பூர் மக்களுக்காக பிரார்த்தனை செய்த நாகாலாந்து மாணவர்கள்… பிரதமர் மௌனம் காப்பதை அடுத்து மணிப்பூர் செல்ல NESO திட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் (NESO) பொதுச் செயலாளர் முட்ஷிக்ஹோயோ யஹோபு “மணிப்பூர் மாநிலத்தில் இன அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அண்டை மாநிலத்தில் நடைபெறும் இந்த சம்பவம் நாகாலாந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு சில … Read more

அமித்ஷா விசிட், 40,000 வீரர்கள் டேரா-மணிப்பூரில் வன்முறை நீடிக்குதே? சந்தேகம் எழுப்பும் நாகாலாந்து!

India oi-Mathivanan Maran கோஹிமா: மணிப்பூரில் வன்முறைகளை கட்டுப்படுத்தாமல் மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது ஏன் என நாகாலாந்து மாணவர் கூட்டமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் மாணவர் கூட்டமைப்பு சார்பாக மணிப்பூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க கோரி மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் வடகிழக்கு மாணவர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் நாகாலாந்து … Read more