“மாரிமுத்துவின் இறப்பு அதிர்ச்சியளிக்கிறது..” நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!

நடிகரும் இயக்குநருமான மாரிமுத்து உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அவருக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். 

நூடுல்ஸ் விமர்சனம்: 20 நிமிடத்தில் சொல்ல வேண்டியதை 2 மணி நேரம் சொன்னால்… படம் எப்படி இருக்கு?

தன் மனைவி சக்தி (ஷீலா) மற்றும் மகளுடன் (ஆழிவா) சென்னையில் வாழ்ந்து வருகிறார் உடற்பயிற்சி பயிற்றுநரான சரவணன் (ஹரீஷ் உத்தமன்). எதிர்பாராத நிகழ்வில் சரவணன் வீட்டிற்குள் சக்தியின் கையால் ஒருவர் கொலையாகிறார். செய்வதறியாது பதறும் அக்குடும்பம் சடலத்தை ஒரு அறையில் மறைத்து வைக்கிறது. இந்நிலையில், முந்தைய தினம் சரவணனுடன் மோதலில் ஈடுபட்ட காவல்துறை ஆய்வாளர் இளங்கோ (மதன் தட்சணாமூர்த்தி) அக்குடும்பத்திற்கு இடைஞ்சல் தர வீட்டிற்கு வருகிறார். மறுபுறம் தங்கள் எதிர்ப்பையும் மீறி காதல் திருமண செய்துகொண்ட மகளைக் காண முதன்முறையாக மகளின் வீட்டிற்கு வந்து  கொண்டிருக்கிறார்கள் சக்தியின் … Read more

கொரோனாவால் ஸ்பெயின் அதிபர் பாதிப்பு : ஜி 20 மாநாட்டில் பங்கேற்பு இல்லை

மேட்ரிட் கொரோனா பாதிப்பு காரணமாக ஸ்பெயின் அதிபர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா ஜி-20 அமைப்புக்கு இம்முறை தலைமை தாங்கி உள்ளது.  எனவே நாளையும், நாளை மறுநாளும் டில்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியாவிற்கு வருகை தர உள்ளனர். ஸ்பெயின் நாட்டின் அதிபர் பெட்ரோ சான்செஸ், இந்தியாவிற்கு வருகை தர இருந்தார். ஆனால் அவருக்கு கொரோனா … Read more

மாரிமுத்து மறைவு : திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி

நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற ரோலில் நடித்து அசத்தி வந்த இவரின் மறைவு திரையுலகினர் மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மாரிமுத்துவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாசர், சரத்குமார், ரோபோ சங்கர், ராஜேஷ், இயக்குனர் வசந்த், எஸ்வி சேகர், … Read more

ஆசியான் நாடுகளுடன் ஒத்துழைப்புக்கு மோடியின் 12 அம்ச திட்டம்| Modis 12-point plan for cooperation with ASEAN countries

ஜகார்த்தா,-‘ஆசியான்’ எனப்படும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தில் உள்ள, 10 நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் உட்பட, பல விஷயங்களில் இணைந்து செயல்படுவது தொடர்பாக, 12 அம்ச திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார். ஆசியான் – இந்தியா 20வது கூட்டம், இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் நேற்று நடந்தது. இதில், ஆசியான் அமைப்பில் உள்ள, 10 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தொடர்பாக, நம் வெளியுறவுத் துறை … Read more

Jawan Box Office: ஜவான் ஒரேநாளில் 130 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டிய ஷாருக்கான்!

சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் நேற்று வெளியானது. அட்லீ இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியான ஜவான், பாசிட்டிவான விமர்சனங்களுடன் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் முதல் நாளிலேயே ஜவான் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தரமான சம்பவம் செய்துள்ளது. அதன்படி ஜவான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் 130 கோடி

தமிழ்க்குடிமகன் விமர்சனம்: ஆதங்கம், அக்கறை சரி; ஆனால், வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகள்தான் தீர்வா?

திருநெல்வேலி மாவட்டம் செந்திப்பட்டி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வரும் சின்னசாமி (சேரன்) சலவைத்தொழிலாளர் என்னும் சேவைச்சாதியைச் சேர்ந்தவர். அரசு வேலை பார்க்கவேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறாமல் போக, உள்ளூரில் அவரைச் சாவுச்சடங்குகளை செய்ய நிர்பந்திக்கிறார்கள். . மருத்துவப் படிப்பை படிக்கும் அவரது தங்கைக்கும் அதே தீண்டாமைக் கொடுமைகள் நடக்கின்றன. இதனால் தனியாக கால்நடைகளை வாங்கி பால் வியாபாரத் தொழில் தொடங்குகிறார். ஆனால் அதிலும் சாதியம் அவரை பின்தொடர, இவரிடம் பால் வாங்க பெரும்பாலோனோர் மறுத்து விடுகிறார்கள். … Read more

அமைச்சர் உதயநிதி மீது நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதியவேண்டும்: 'புதிய தமிழகம்' கிருஷ்ணசாமி

மதுரை: சனாதனத்திற்கு எதிராக பேசிய விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து அமைச்சர் உதயநிதி மீது வழக்கு பதியவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தியாகி இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவிற்கு பரமக்குடிக்கு செல்ல விடாமல், காவல்துறை கடந்த 3 ஆண்டுகளாக இடையூறு செய்கிறது. மதுரை- பரமக்குடி வரை இடையிடையே எனது வாகனம் தடுத்து நிறுத்தப்படுகிறது. இடையூறு இன்றி அஞ்சலி செலுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். … Read more

ஜி20 விருந்து | காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அழைப்பு இல்லை – நிதிஷ் குமார், மம்தா பானர்ஜிக்கு அழைப்பு

புதுடெல்லி: ஜி20 விருந்து அழைப்பிதழில் பாரத குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டிருந்தது சர்ச்சையான நிலையில், இந்த விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைக்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாரத் குடியரசுத் தலைவர் என்பதைத் தொடர்ந்து நாட்டின் பெயரை மத்திய அரசு மாற்ற விரும்புவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி அரசை கடுமையாக விமர்சித்தன. அதன் தொடச்சியாக விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களின் பட்டியல் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இந்த நிகழ்வுக்கு முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், ஹெச்டி தேவகவுடா உள்ளிட்டோருக்கு மத்திய … Read more

அரசு பேருந்துகளில் புதிய மாற்றம்… இருக்கை வசதியும், அமைச்சர் சிவசங்கர் அப்டேட்டும்!

தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்றைய தினம் அளித்துள்ள பேட்டி மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதாவது, மாநில அரசின் பேருந்துகளில் உடல் பருமனாக இருப்பவர்களும் பயணிக்க ஏதுவாக பேருந்துகளில் சீட் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதமே இதுதொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, அரசு பேருந்துகளில் இருக்கைகளின் எண்ணிக்கை 57ஆக இருந்தது. இந்நிலையில் உட்காருவதற்கு இடையூறு இல்லாத வகையில் புனரமைக்கப்படும். இதன்மூலம் பேருந்து இருக்கைகளின் … Read more