அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய கர்நாடக சிற்பி வடித்த ராமர் சிலை தேர்வு: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ் செதுக்கிய ராமர் சிலை, அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை … Read more

ஜப்பான் நிலநடுக்கம் | பலி எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு: சுனாமி எச்சரிக்கை வாபஸ்

டோக்கியோ: ஜப்பானில் புத்தாண்டு தினமான நேற்று (ஜன.1) ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டிருந்தாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இப்போதைக்கு தங்கள் வீடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இது ஒருபுறம் இருக்க சேதங்களைக் கணக்கிட அரசு குழுக்கள் பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு விரைந்துள்ளன. பயங்கர நிலநடுக்கம்: ஜனவரி 1 ஆம் தேதி இந்திய நேரப்படி பகல் 12.40 மணிக்கு ஜப்பானில் முதல் நிலநடுக்கம் … Read more

புதிய கிரிமினல் சட்டம்: 10 ஆண்டு சிறை, ரூ.7 லட்சம் அபராதம்! வட மாநிலங்களில் வெடித்தது போராட்டம்!

Truck Drivers Protest: விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடினால் 10 ஆண்டு சிறை, ரூ.7 லட்சம் அபராதம். புதிய கிரிமினல் சட்டத்தை எதிர்த்து லாரி-பஸ் ஓட்டுனர்கள் போராட்டம்

வெள்ள நிவாரண நிதி கேட்ட முதலமைச்சர் ஸ்டாலின்… எதிர்த்து கோஷமிட்ட பாஜகவினர்

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனைய திறப்பு விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதி வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாஜகவினர் அவருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.  

ஹர்திக் பாண்டியா இல்லை! 2024ல் இந்திய அணியின் கேப்டனாகும் 3 வீரர்கள்!

இந்திய அணி 2024ல் பல முக்கிய போட்டிகளில் விளையாட உள்ளது.  ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.  அதன் பிறகு இந்தியாவில் மூன்று டி20 போட்டிகளில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.  அதன்பிறகு, இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.  2024 டி20 உலக கோப்பைக்காக அணியை தேர்ந்தெடுப்பதில் பிசிசிஐ தீவிரம் காட்டி வருகிறது.  ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு அதில் சிறப்பாக விளையாடிய வீரர்களை … Read more

கலைஞர் 100: விஜய், அஜித் பங்கேற்கிறார்களா? – தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி விளக்கம்

திரையுலகமே திரண்டு கொண்டாடவிருக்கும் கலைஞர் 100 விழா, நெருங்கி வருவதால், விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. தமிழ்த் திரைப்பட சங்கம் தலைமையில் திரைத்துறையில் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து, கலைஞர் 100 விழாவைக் கொண்டாட உள்ளது. இவ்விழா வருகிற 6ம் தேதி, கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. விழாவிற்கான மேடை அமைக்கும் பணி கடந்த டிசம்பர் மாதம் 26-ம் தேதி அன்றே தொடங்கிவிட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி, செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், … Read more

திமுகவின் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி! உச்சநீதி மன்றம்

டெல்லி: நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. இளைஞர் அணி, மருத்துவர் அணி, மாணவர் அணி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதை, திமுக இளைஞர் அணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.  50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. … Read more

தடுப்புச் சுவராக வந்த தங்கை.. ஜெர்க்கான ஜெகன் மோகன்! காங்கிரஸில் ஷர்மிளா? ஆந்திர அரசியலில் அதிரடி

அமராவதி: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்திலேயே பல்வேறு அதிரடி அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த Source Link

Two arrested for smuggling ganja by plane | விமானத்தில் சென்று கஞ்சா கடத்திய இருவர் கைது

தரமணி,தரமணி, துரைப்பாக்கம் பகுதியில், கல்லுாரி மாணவர்கள், கட்டுமான தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா வியாபாரம் செய்யப்படுகிறது. தரமணி போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில், திரிபுராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவது தெரிந்தது. திரிபுராவை சேர்ந்த ஷபீக் மியா, 32, இமான் உசேன், 34, ஆகியோரை, நேற்று, போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பெரும்பாக்கத்தில் தங்கிய இவர்களில், ஷபீக் மியா தனியார் மருத்துவமனையில் துாய்மை ஊழியராகவும், இமான் உசேன், பாஸ்ட் புட் … Read more

புத்தாண்டு அப்டேட்களில் முந்திய விஜய்யின் 'கோட்'

2024ம் ஆண்டு பிறந்ததையொட்டி பல்வேறு திரைப்படங்களின் அப்டேட்டுகளை வெளியிட்டார்கள். அவற்றில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமாக விஜய்யின் 68வது படம் இருந்தது. ஏற்கெனவே வெளியான தகவலின்படி படத்திற்கு 'கோட்' என்ற பெயரையே வைத்திருந்தார்கள். படத்திற்கு ஆங்கிலத்தில் நீளமாக 'The Greatest Of All Time' என வைத்துள்ளார்கள். அதன் சுருக்கமாக 'தி கோட்' என்று ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். டிசம்பர் 31ம் தேதியன்று முதல் பார்வையும், நேற்று புத்தாண்டு தினத்தன்று இரண்டாவது பார்வையும் வெளியிட்டார்கள். இரண்டு போஸ்டர்களுமே ஹாலிவுட் … Read more