தேர்தலில் தோற்ற கையோடு ரஜினிகாந்தை சந்தித்த ராதிகா சரத்குமார்; மனமுடைந்தாரா? உண்மையான காரணம் என்ன?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் மும்முரமாக நடித்துக் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கான படப்பிடிப்பு இன்னும் நான்கு தினங்களில் அதாவது ஜூன் 10ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதனிடையே இன்று அதாவது ஜூன் மாதம் ஆறாம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நடிகர்

கங்கனாவை கன்னத்தில் அறைந்தது ஏன்? சிஐஎஸ்எப் பெண் காவலர் விளக்கம்

சண்டிகர்: டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இது தொடர்பாக கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். … Read more

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு காத்தான்குடி கடற்கரை சுத்தம் செய்யும் பணி முன்னெடுப்பு!!

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிதேச கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. தேசிய சுற்றாடல் வாரத்தினை முன்னிட்டு பிரதேச செயலகப் பிரிவுகளில் முன்மொழியப்பட்ட நிகழ்ச்சித்திட்டங்கள் நாடு பூராகவுமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதரின் வழிகாட்டலின் கீழ் இப்பிரதேசத்திற்கான சுற்றாடல் சார் நிகழ்சித்திட்டங்களான சிரமதானம், மரநடுகை, விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் விசேட செயற்றிட்டங்கள் இவ்வாரம் முழுவதும் நடைபெற்றுவருகின்றன. இதனடிப்படையில் (05) … Read more

குடிநீர் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட வழக்கு: சிபிசிஐடி கூடுதல் விசாரணை அறிக்கை  தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: புதுக்கோட்டையில் குடிநீர் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீஸார் கூடுதல் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: புதுக்கோட்டை சங்கம்விடுதி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் ஏப்ரல் 25-ல் மாட்டு சாணம் கலக்கப்பட்டது. இந்த நீரை பருகிய பலரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரட்டை குவளை … Read more

“ராகுலால் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” – பங்குச்சந்தை ஊழல் குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி

புதுடெல்லி: மிகப் பெரிய பங்குச் சந்தை ஊழல் குறித்த ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொள்ளமுடியாமல் ராகுல் இவ்வாறு பேசுவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (ஜூன் 6) செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “போலி கருத்துக் கணிப்புகளுக்கும், தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாகவே முதலீடு செய்து பெரும் லாபம் ஈட்டிய வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், பாஜகவுக்கும் என்ன தொடர்பு என்பதை நாடாளுமன்ற … Read more

மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம் செட் தகுதித் தேர்வை தள்ளிவைத்தது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பலகலைக்கழகம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்க இருந்த செட் தகுதித் தேர்வை தள்ளி வைத்துள்ளது. மாநில ஆவில் கல்லூரி உதவிப் பேராசிரியர் பணி தகுதித் தேர்வான ‘செட் ‘ தேர்வு மாநில அளவில் நடத்தப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திடம் தமிழகத்தில் ‘ ‘செட் ‘ தேர்வை நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான ”செட்’ தேர்வு ஜூன் 7 மற்றும் 8-ம் தேதிகளில் கணினி வழியில் நடத்தப்படும் என … Read more

விறுவிறுப்பான சூட்டிங்கில் பிரேமலு 2.. சூட்டிங்கில் யாரெல்லாம் ஜாய்ன் ஆகியிருக்காங்க தெரியுமா?

சென்னை: மலையாளத்தில் உருவாகி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு மாஸ் ஹிட் கொடுத்தப்படம் பிரேமலு. காதலையும் காமெடியையும் இணைத்து இந்தப் படத்தில் கலாட்டா செய்திருந்தார் இயக்குநர் கிரிஷ். படம் மலையாளத்தில் ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்து தமிழ், தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. பிரேமலு படம் அதிகமாக தெலுங்கு ரசிகர்களை கவர்ந்தது. அதற்கு காரணம் இந்த

“ரவி – அரை நூற்றாண்டு சினிமா சுய பிரதிபலிப்பு” ஜனாதிபதி தலைமையில் பாராட்டு நிகழ்வு

பிரபல திரைப்பட நடிகர் ரவீந்திர ரந்தெனிய 5 தசாப்தங்களாக இலங்கைத் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி “ரவி – சினிமா அரை நூற்றாண்டு சுயநினைவு” பாராட்டு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (05) நடைபெற்றது. 1974 இல் திரையிடப்பட்ட ‘தரங்கா’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இணைந்த ரவீந்திர ரந்தெனிய என்ற நடிகர், சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் என்பதோடு தனக்குக் கிடைத்த ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்து கடந்த … Read more

வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலா? – வேட்பாளர் குறித்து கேரள காங்கிரஸில் எழுந்த விவாதம்!

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். அமேதி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்த நிலையில், வயநாடு தொகுதியில் 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று எம்.பி-யாக பணி செய்து வந்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியிலும் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதியான ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இரண்டு தொகுதிகளிலுமே ராகுல் காந்தி … Read more

டெல்லி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் பயணம்

சென்னை: டெல்லியில் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நாளை (ஜூன் 7) நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக கூட்டணி கட்சி தலைவர் டெல்லி செல்கின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் பாஜக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மத்தியில் ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்பதால், பாஜகவுக்கு தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், கூட்டணி … Read more