பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா ஜூன் 9-க்கு தள்ளிவைப்பு?
புதுடெல்லி: டெல்லியில் ஜூன் 9-ம் தேதி மாலை நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 8-ல் பிரதமர் மோடி பதவியேற்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இவ்விழா ஒருநாள் தள்ளிவைக்கப்படுவதாக தெரிகிறது. இந்தப் பதவியேற்பு விழாவில் தெற்காசிய தலைவர்கள் பலர் பங்கேற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவிருப்பதை ஏற்கெனவே உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்களை … Read more