4-6 வழி பாதையாக மாற்ற திட்டம் மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி சுங்க கட்டணம்: ஒன்றிய அமைச்சர் கட்கரி தகவல்

புதுடெல்லி: அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாநில நெடுஞ்சாலைகளை கையகப்படுத்தி மேம்படுத்த ஒன்றிய அரசு  திட்டமிட்டுள்ளது,’  என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை  அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மும்பையில் நடந்த  தேசிய  பரிவர்த்தனை உறுப்பினர்கள் சங்கத்தின் 12வது சர்வதேச மாநாட்டில் ஒன்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொலி மூலம் பேசியதாவது: அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட மாநில நெடுஞ்சாலைகளை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு எடுத்து கொள்ள … Read more

திருப்பதியில் 24ம் தேதி ஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி தங்க வாசலுக்கு அருகில் உள்ள கண்டா மண்டபத்தில் தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வரும் 24ம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் கண்டா மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட சர்வ பூபாள வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி கருடாழ்வார் சன்னதி நோக்கியும், தெற்கு நோக்கி சேனாதிபதி உற்சவர்  எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்யப்பட உள்ளது. இதில் … Read more

டெல்லி துணை முதல்வர் சிசோடியா இன்று கைது?

புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகுமாறு டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ  சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியில்  கலால் கொள்கை அமல்படுத்தப்பட்டதில் முறைகேடு நடந்ததாக சிபிஐ  குற்றம்சாட்டியது. இதில் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது  அது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் சிசோடியாவிடம் சிபிஐ பலமுறை விசாரித்து விட்டது. இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு  சிசோடியாவுக்கு  … Read more

புதிய காங்கிரஸ் தலைவர் யார்? நாடு முழுவதும் இன்று வாக்குப்பதிவு: மல்லிகார்ஜூனா கார்கே – சசிதரூர் போட்டி; வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்படும்

புதுடெல்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் நாடு முழுவதும் இன்று நடக்க உள்ளது. மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூனா கார்கே – சசிதரூர் போட்டியிடுகின்றனர். தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நாளை மறுதினம் எண்ணப்பட்டு, அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவி வகித்து வருகிறார். உடல் நலக்குறைவால் அவரால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருக்கும் நிலையில், கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் … Read more

ஆட்டுக்குட்டியை விழுங்கிவிட்டு பள்ளி பேருந்தில் படுத்திருந்த மலைப்பாம்பு… வைரல் வீடியோ!

உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் பள்ளி பேருந்தில் பதுங்கியிருந்த மாலை பாம்பை ஒருமணிநேரம் போராடி மீட்டனர். அதை மீட்கும் வீடியோ தற்போது பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.  ஒரு சர்வதேச பள்ளியைச் சேர்ந்த அந்த பேருந்தில் உள்ள மலைப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.  தகவல் அறிந்து வந்த அவர்கள் பாம்பை பத்திரமாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சீட்டிற்கு அடியில் புகுந்த பாம்பை, அவர்கள் குச்சியை பயன்படுத்தி அடித்தபோது, அவர்கள் பாம்பை … Read more

விபத்தில் சிக்கிய முதல்வர் பயணித்த படகு… பிகாரில் பரபரப்பு!

பீகார் மாநில தலைநகர் பாட்னா அருகே கங்கை நதியில் சாத் பூஜை நடைபெற உள்ளது. இதனையடுத்து பூஜை நடைபெறும் இடத்தை நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அதிகாரிகள் ஒரு படகில் பயணித்து கொண்டிருந்தனர். கங்கை நதியில் பயணித்து கொண்டே சாத்காட் பகுதியில் அவர்கள் படகில் இருந்தபடி ஆய்வு செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று படகு நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்தி் தூணில் மோதியது. படகில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிகழ்ந்த … Read more

"கல்வித்துறையில் மறுமலர்ச்சி" – இந்தி மொழியில் மருத்துவ படிப்பை துவக்கி வைத்த அமித்ஷா!

புதிய கல்விக் கொள்கை மூலம் பிராந்திய மற்றும் தாய்மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். நாட்டிலேயே முதன்முறையாக, எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்பை இந்தி மொழியில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்றது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் செளகான் உள்ளிட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், மருத்துவப் பாடப் புத்தகங்களின் ஹிந்திப் பதிப்பை மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுப் பேசினார். “இந்தி மொழியில் … Read more

தீபாவளி | புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் அரிசி, சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்: ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கான பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி தீபாவளி சிறப்பு அங்காடியை திறந்து வைத்து 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார். … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அறுவை சிகிச்சை… உடனே டிஸ்சார்ஜ்!

இந்தியாவின் 15 ஆவது தலைவராக கடந்த ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்று கொண்டார் திரெளபதி முர்மு. நாட்டின் முதல் பழங்குடியினத்தை சேர்த்த நாட்டின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும், இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். இந்த நிலையில் இன்று அவர். டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கு அவரது இடது கண்ணில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் குடியரசு தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது. காலை 11:30 … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : ஓட்டு போடுவாரா ராகுல் காந்தி ? – மூத்த தலைவர் பதில்

காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (அக். 17) காலை தொடங்குகிறது. இந்த தேர்தலுக்கான அறிவிப்பாணை கடந்த செப். 22ஆம் தேதியும், வேட்பு மனு தாக்கல் செப். 24ஆம் தேதியும் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை வரும் அக். 19ஆம் தேதி நடைபெறுகிறது.  தலைவர் பதவிக்கு அக்கட்சியின் மூத்த தலைவர்களான சசி தரூர், மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் போட்டியிடுகின்றனர். நீண்ட ஆண்டுகள் கழித்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு காந்தி குடும்பம் அல்லாதவர்கள் போட்டியிடுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  … Read more