திருமலையில் கருட சேவை 3 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்| Dinamalar

திருப்பதி:திருமலையில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாள் இரவு நடந்த கருட சேவையைக் காண, மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.திருமலையில் நேற்றிரவு, பிரம்மோற்சவத்தின் முக்கிய வாகன சேவையான கருட சேவையில் மலையப்ப சுவாமி எழுந்தருளி சேவை சாதித்தார். இதைக் காண, ஏராளமான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர்.காலை முதல் அனைவரும் மாடவீதியில் ‘கேலரி’ களில் காத்திருந்தனர். அவர்களுக்கு தேவஸ்தானம் உணவு, குடிநீர், பால், சிற்றுண்டி உள்ளிட்டவற்றை வழங்கியது.கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா தொற்று காரணமாக, … Read more

அக்டோபர் 7-ல் வெளியாகும் மம்முட்டியின் ரோர்ஸ்காட்ச்

மம்முட்டி நடிப்பில் ஏற்கனவே இந்த வருடத்தில் பீஷ்ம பருவம், சிபிஐ 5, மற்றும் புழு என மூன்று படங்கள் வெளியாகிவிட்டன. இந்த நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள ரோர்ஸ்காட்ச் என்கிற படம் வரும் அக்டோபர் 7ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தணிக்கை செய்யப்பட்ட இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தை நிசாம் பஷீர் என்பவர் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே இயக்கிய கட்டியோலானு எண்டே மாலாக்க என்கிற குடும்ப படத்திற்காக வெகுவாக பாராட்டப்பட்டவர். ஆனால் … Read more

18வது பிறந்த நாள் கொண்டாடிய அமெரிக்காவின் அதிசய இளைஞர்| Dinamalar

வாஷிங்டன் :அமெரிக்காவில் மரபணு குறைபாடு காரணமாக இரண்டு முகங்களுடன் பிறந்து, நீண்ட நாட்களுக்கு உயிருடன் இருக்க மாட்டார் என டாக்டர்களால் கூறப்பட்டவர், நேற்று தன் 18வது பிறந்த நாளை கொண்டாடினார். அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சேர்ந்தவர் பிராண்டி. இவரது மகன் ஜான்சன். கடந்த 18 ஆண்டுகளுக்கு முன், இவர் பிறந்தபோது, டாக்டர்களும், பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்தனர். ஜான்சனுக்கு இரண்டு முகங்கள் இருந்தன; அவை ஒழுங்கற்று இருந்தன. ஒரு மண்டை ஓடு, இரண்டு நாசி, பிளவுபட்ட வாய் போன்ற … Read more

மாணவிகள் முன் சீன் போட்டு அசிங்கப்பட்ட இளைஞர்!!

கல்லூரி மாணவிகள் முன்பு இருசக்கர வாகனத்தில் சீன் போட்ட இளைஞர் கீழே விழும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் பேருந்து நிலையத்தில் மாணவிகள் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அதில் வாகனத்தின் பின்னால் இருந்த இளைஞர், இருக்கையின் மேலே ஏறி நிற்க முயற்சி செய்தார். அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் … Read more

அதிவேக அலைக்கற்றை 5 ஜி நடைமுறைக்கு வந்தது… ஆனால், சேவை எப்படி இருக்கும்..?

இந்தியாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5 ஜி இணைய சேவை இன்று டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெற்ற மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர், 5 ஜி இணைய சேவை வேகம் எப்படி இருக்கும் என்பதை பிரதமர் மோடிக்கு ஆகாஷ் அம்பானி நேரில் விளக்கிக் காட்டினார். 5 ஜி சேவை `உலக தரம் வாய்ந்த 5ஜி சேவை வழங்கப்படும்’ – ஏலத்தை தன்வசமாக்கிய அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம்! தொலைத்தொடர்பின் திருப்புமுனையாக இருக்கும் 5 … Read more

ஜெட் வேக உயர்வில் சென்னை மெட்ரோ ரயில் பயணங்களின் எண்ணிக்கை: 7 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சம்

சென்னை: சென்னை மெட்ரோவில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 4 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் தொடங்கி கடந்த 7 ஆண்டுகளில் நடப்பு ஆண்டில்தான் (2022) அதிகம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட திட்டம் 54.1 கி.மீ தொலைவிற்கு விம்கோ நகர் முதல் சென்னை விமான நிலையம் வரை, சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை என இரண்டு வழித்தடங்களில் முழுமையாக செயல்பாட்டில் உள்ளது. இந்த வழித்தடங்களில் தினசரி பயணம் செய்யும் … Read more

மோடி சனாதனத்தின் பாதுகாப்பு அரண்- திருமாவளவன் பாய்ச்சல்!

விழுப்புரத்தில் பழங்குடி இருளர் சங்கத்தின் சார்பில், பழங்குடி இருளர்களுக்கான மனித உரிமை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வன்கொடுமை தடுப்பு சட்டம் 2016 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். இருளர்கள் மீதான பொய் வழக்குகளை நீக்க வேண்டும் உள்ளிட்ட 11 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் கலந்து கொண்டு உரையாற்றினார் அப்போது அவர் பேசுகையில்: இந்த மாநாடு என்பது அடிப்படையில் சனாதன எதிர்ப்பு மாநாடு, சாதி எதிர்ப்பு … Read more

மார்க்சிஸ்ட் கம்யூ., முன்னாள் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 68. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியத் தலைவரான பாலகிருஷ்ணன், உடல்நலக் குறைவு காரணமாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விலகினார். கண்ணூரில் உள்ள தலச்சேரி சட்டப்பேரவை தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணன், 2006 ஆம் ஆண்டு முதல் … Read more

அதிவேக 5ஜி சேவை இன்று தொடக்கம்; ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு அடித்தது யோகம்.! ஒடிசாவில் ஆசிரியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி

மயூர்பஞ்ச்: இன்று முதல் 5ஜி சேவை தொடங்கிய நிலையில் ஜனாதிபதி முர்முவின் பள்ளிக்கு இந்த சேவை வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒடிசாவில் ஆசிரியர்களும், மாணவர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய மொபைல் காங்கிரஸின் தொடக்க விழாவில் பங்ேகற்ற பிரதமர் மோடி, இன்று 5ஜி தொலைதொடர்பு சேவையை  தொடங்கிவைத்தார். இந்த சேவை படிப்படியாக அடுத்த சில ஆண்டுகளில் நாடு முழுவதும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் மறைந்த கணவருக்காக நிறுவப்பட்ட எஸ்எல்எஸ் ரெசிடென்ஷியல் பள்ளிக்கு 5ஜி … Read more

இலவச டிக்கெட் வேண்டாம் என தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவா? கோவை எஸ்.பி விளக்கம்!

அரசுப் பேருந்தில் இலவச பயணச்சீட்டு வேண்டாம் என நடத்துநரிடம் தகராறு செய்த மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு மாவட்ட எஸ்.பி. மறுப்பு தெரிவித்துள்ளார். கோவை மதுக்கரையில் இருந்து பாலத்துறை செல்லும் அரசு பேருந்தில், இலவச டிக்கெட் வேண்டாம் என்று கூறி மூதாட்டி துளசியம்மாள் நடத்துநரிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது. மதுக்கரை அதிமுக ஐ.டி. பிரிவினர் வேண்டுமென்றே மூதாட்டியை பேச வைத்து வீடியோ பதிவு செய்து வெளியிட்டதாக திமுக ஐ.டி. … Read more