யார் அந்த மாப்பிள்ளை – வர்ஷா கேள்வி

96, பிகில், செல்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வர்ஷா பொல்லம்மா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து இவர் வருகிறார். இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவரின் மகனை காதலிப்பதாகவும், திருமணம் செய்யபோவதாகவும் தகவல் பரவியது. இதை மறுத்துள்ள வர்ஷா, ‛‛எனது திருமணம் பற்றி வெளியான செய்தி உண்மையில்லை. அந்த மாப்பிள்ளை யார் என்று சொல்லுங்கள், அப்போது தான் அவரை பற்றி எனது வீட்டில் பேச முடியும். எனது திருமணம் பற்றி வெளியான செய்தி உண்மையில்லை. … Read more

தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டும் என்கிறார் ஜனாதிபதி.

போட்டிமிகு தேயிலைச் சந்தையில் நிலைத்திருக்க வேண்டுமாயின் தேயிலை தொழிற்துறையை நவீனமயப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட பொருளாதாரத்தில் இது மிகவும் இன்றியமையாதது எனக்கூறிய ஜனாதிபதி, ஆரம்பத்தில் தேயிலை தொழிற்துறையில் கிடைத்த வெற்றியை மீண்டும் உறுதி செய்ய வேண்டுமென்றும் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் நேற்று முன்தினம் (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 32வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி … Read more

ஒரு மாணவர் கூட சேராத 25 பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை கவுன்சலிங் ஷாக்

ஒரு மாணவர் கூட சேராத 25 பொறியியல் கல்லூரிகள்: அண்ணா பல்கலை கவுன்சலிங் ஷாக் Source link

இன்று அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இன்று  கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவு தினங்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தோடு கன்னியாகுமரி மாவட்டம் இணைந்த தினத்தை முன்னிட்டு இன்று (நவம்பர் 1ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை … Read more

திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்றுமிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நவ.1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும். மிகக் கனமழை: … Read more

டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சு இல்லை – பாத யாத்திரையில் ராகுல் காந்தி திட்டவட்டம்

ஹைதராபாத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்போது தெலங்கானாவில் தேசிய ஒற்றுமை யாத்திரையை தொடர்கிறார். நேற்று ரங்காரெட்டி மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்திக்கு அங்குள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திம்மாபூர் என்ற இடத்தில் செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றி பெறும். குஜராத் மற்றும் இமாச்சலபிரதேச தேர்தல் வியூகத்தை காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தீர்மானிப்பார். பாஜகவும் டிஆர்எஸ் கட்சியும் பிரிவினைவாத அரசியலில் ஈடுபடுகின்றன. … Read more

தென் கொரியாவில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை: அலி சப்ரி

தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஹெலோவீன் நிகழ்வின் போது ஏற்பட்ட சன நெரிசலில் உயிரிழந்த இலங்கை இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார். சியோலில் இடம்பெற்ற அனர்த்தத்தில் கண்டி உடதலவின்ன பகுதியைச் சேர்ந்த 27 வயதான முனவ்வர் மொஹமட் ஜினாத் எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார். உறவினர்கள் கோரிக்கை  இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை நாட்டிற்கு கொண்டுவர வேண்டியது அவசியமென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளதாக … Read more

குஜராத் தொங்கு பால விபத்தில் பாஜக எம்.பி.யின் உறவினர்கள் 12 பேர் விபத்தில் இறந்துவிட்ட சோகம்..!

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் பாஜக எம்.பி.ஒருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 12  பேர் இறந்து இருப்பது அதிர்ச்சியை எற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்து இருக்கிறது.  மோர்பி நகரத்தில் உள்ள கேபிள் பாலத்தின் மீது நேற்று மாலை 500 பேர் திரணடிருந்த போது விபத்து நேரிட்டது. தொங்குப் பாலம் திடீரென அறுந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 400 பேர் மர்பி ஆற்றில் விழுந்தனர். ஆற்றில் 10 … Read more

குஜராத் பால விபத்தில் நடந்தது என்ன? உயிர்பிழைத்த அஷ்வின் கூறிய தகவல்

பாலம் அறுந்து விழுந்தபோது மரக்கிளைகளை பற்றி பிடித்து தப்பி விட்டதாக அஷ்வின் என்பவர் கூறியுள்ளார் பாலம் இடிந்து விழுவதற்கு முன்பு 3 முறை அதில் இருந்து ஒரு சத்தம் வெளிவந்ததாக அஷ்வின் தெரிவித்துள்ளார்     இந்திய மாநிலம் குஜராத்தில் தொங்கு பாலம் விபத்திற்குள்ளானபோது அதிலிருந்து தப்பிய நபர் பேட்டி அளித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் அறுந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் 141 பேர் உயிரிழந்தனர். … Read more